திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது - ரூபாய் 25,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.

திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது - ரூபாய் 25,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.

திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது - ரூபாய் 25,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.

திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் ரோடு எஸ்.கே நகரை சேர்ந்த நல்லக்கண்ணு மகன் மந்திரம் (53) என்பவர் கடந்த 26.11.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் to குலசேகரன்பட்டினம் ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.

இதுகுறித்து மந்திரம் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பீர்முகமது மகன் ரசூல் (21), தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தல் பகுதியை சேர்ந்த சொரிமுத்து மகன் மாடசாமி (29) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் முத்துகிருஷ்ணன் (எ) முத்து (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி மந்திரத்தின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. குமார் மற்றும் போலீசார் எதிரிகளான ரசூல், மாடசாமி மற்றும் முத்துகிருஷ்ணன் (எ) முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூபாய் 25,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ரசூல் மீது ஏற்கனவே குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மூன்றடைப்பு காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், நாங்குநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவந்திபட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், விஜயநாராயணம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி நகர காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் என 12 வழக்குகளும், எதிரி மாடசாமி மீது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.