தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த 34 மாடுகள் பிடிக்கப்பட்டது..!
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அலைந்து திரிந்த 34 மாடுகள் : மாநகராட்சியால் பிடிக்கப்பட்டன.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாகவும் அலைந்து திரிந்த 34 மாடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு தருவைகுளம் உரக்கிடங்கில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் கால்நடை வளர்ப்போர் தனியாக கொட்டில் அமைத்து தங்களது பொறுப்பில் கால்நடைகளை வளர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் நிலையில் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன் கால்நடைகள் வளர்ப்போர் மீது குற்றவியல் நடவடிக்கையும் தொடரப்படும் என மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.