தூத்துக்குடி மாவட்டத்தில் 14ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 14ஆம் தேதி மொத்தம் 13 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 14ஆம் தேதி தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். வசந்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 5 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், திருவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமர்வு உட்பட ஆக மொத்தம் 13 அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.