திருநெல்வேலி சரகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 53பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது: டி.ஐ.ஜி. தகவல்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 53பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 53பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்ட ஒழுங்கு நிலை குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 36 குற்றவாளிகளும், தென்காசி மாவட்டத்தில் 20 குற்றவாளிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 குற்றவாளிகளும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 குற்றவாளிகளும் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 126 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 779 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெற்றும், நன்னடத்தை பிணையை மீறிய 19 எதிரிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2677 குற்றவாளிகளுக்கு எதிரான பிணையில் வெளிவரமுடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1050 பிணையில் விடமுடியாத பிடியாணை நிறைவேற்றியுள்ளனர் மற்றும் சென்னை மாநகர காவல் சட்டத்தின் கீழ் 226 வழக்குகளும், 106 கஞ்சா வழக்குகளும், 128 குட்கா வழக்குகளும், 63 லாட்டரி சீட்டு வழக்குகளும், 65 சூதாட்ட தடுப்பு வழக்குகளும் மற்றும் 1922 மதுவிலக்கு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்குகள் :
நடப்பாண்டில் இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 106 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 எதிரிகள் கைது செய்ய்பபட்டுள்ளனர். அவர்களுள் 23 எதிரிகள் குண்டர் தடுப்பு காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 320 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு, அதில் நன்னடத்தை பிணையை மீறிய 5 எதிரிகள் மீது பிணை மீறியதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கு குற்றவாளிகளது, ரூபாய் 8,21,068/- மதிப்பிலான 120 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
குற்றவழக்குகள் கண்டுபிடிப்புமீட்கப்பட்ட விபரம்
இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 46% குற்றவழக்குகள் புலன்விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 55% களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை இரண்டு ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, 37 வழிப்பறி, 56 வீட்டை உடைத்து திருடிய குற்றம் மற்றும் 136 பெரிய அளவிலான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 59% குற்றவழக்குகள் புலன் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 54% களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது." இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.