பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கம்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களின் அறிவுசார் திறன் வளர்ச்சிக்கான ஒரு நாள் பயிலரங்கம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நீம் பவுண்டேசன் சார்பில் பள்ளிகளில் பணிபுரியும் தன்னார்வ ஆசிரியர்களின் அறிவுசார் திறன் வளர்ச்சிக்கான ஒரு நாள் பயிலரங்கம் திரேஸ்புரத்தில் நடைபெற்றது.
உருவாகுவோம் ; உருவாக்குவோம் என்னும் உயரிய எண்ணத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் பணி செய்யும் நீம் பவுண்டேசன் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி தந்து உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தன்னார்வ ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிலரங்கத்தினை நீம் திட்ட இயக்குநர் துவங்கி வைத்து பயிலரங்கம் குறித்த நோக்கம் மற்றும் தேவை குறித்து விளக்கினார். தொடர்ந்து பள்ளிக் கல்வி துறையின் பள்ளி செல்லாக் குழந்தைகளை மீட்டெடுக்கும் பணிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் பேசுகையில் ஏன் பள்ளி இடை நிற்றல் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று விவரித்தார்.
அதன் பிறகு சமூக நலத்துறையின் ஒன்றுங்கினைந்த சேவை மையத்தின் களப் பணியாளர் ஹெப்சிபா பேசுகையில் பல்வேறுபட்ட காரணங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பாக, வழிநடத்துதலாக ஒருங்கிணைந்த சேவை மையம் எவ்வாறு இயங்குகிறது என்றும் விளக்கினார். பின்னர் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு கல்விப் பணி செய்து வருகிறோம் என்று பிரையன்ட் நகர் நல்ல சமாரியன் செவித் திறன் குறைபாடுள்ளோர் மேல் நிலைப் பள்ளி சிறப்பு ஆசிரியர்கள் சுபா மற்றும் மிஸ்டிக்கா உதாரணங்களுடன் எடுத்துரைத்தனர்.
பின்னர் கடந்த 6 மாதங்களாக நீம் பவுண்டேசன் தன்னார்வ ஆசிரியர்கள் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எவ்விதங்களில் சிறப்புப் பயிற்சி தந்து வருகிறது என்பதனை நீம் தன்னார்வ ஆசிரியர்கள் பெனன்சிர் அமினா மற்றும் மரிய நான்சி விளக்கினர். தொடர்ந்து நீம் பவுண்டேசன் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார் பேசினார்.
தூத்துக்குடி விஷன் நியூஸ் இனையதளத்தில் உங்கள் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் இடம்பெற.. whatsapp @ +91 7904371534
தன்னார்வ ஆசிரியர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்னவென்று நீம் திட்ட இயக்குநர் நிமிஷா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் விவரிக்க பயிலரங்கம் நிறைவுற்றது. தன்னார்வ ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சியை நீம் தன்னார்வ ஆசிரியர்கள் ரிசிவந்த் சந்திப், மணிகண்டன், அந்தோணி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியை வீடியோ மற்றும் ஆடியோவாக அறிந்து கொள்ள ...