தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது!
புதுக்கோட்டை அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் முருகன்நகரை சேர்ந்தவர் மகேந்திரபெருமாள் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரது தந்தை முருகன். தாய் பூமாரி. தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். பூமாரி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மகேந்திர பெருமாள் 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லையாம். இதனால் பூமாரி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மகேந்திரகுமாரை அடித்து கொலை செய்து அல்லிகுளம் காட்டுப்பகுதியில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை போலீசார் மகேந்திர பெருமாள் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், குடிபோதையில் நடந்த தகராறில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி ராஜாராம் நகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 19), குறுக்குச்சாலை வெங்கடாசலபரத்தை சேர்ந்த சிவகுருநாதன் (வயது 20) உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து மகேந்திரபெருமாளை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.