ரேஷனில் தரமான பொருட்கள் வழங்க கோரி தாசில்தார் முன்பு ரேஷன் அரிசியை கொட்டிய அரசியல் கட்சி பிரமுகர்!

ரேஷனில் தரமான பொருட்கள் வழங்க கோரி தாசில்தார் முன்பு ரேஷன் அரிசியை கொட்டிய அரசியல் கட்சி பிரமுகர்!

ரேஷனில் தரமான பொருட்கள் வழங்க கோரி தாசில்தார் முன்பு ரேஷன் அரிசியை கொட்டிய அரசியல் கட்சி பிரமுகர்!

கோவில்பட்டியில் ரேஷனில் சீராக மற்றும் தரமான பொருட்கள் வழங்க வலியுறுத்தி, தாசில்தார் முன்பு அரிசியை கொட்டி தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை. மேலும், சரிவர பொருட்கள் வழங்குவதில்லை, பருப்பு சீனி எண்ணெய் வாங்க சென்றால், டீத்தூள் சோப்பு, மைதா, ரவை என மற்ற பொருட்களையும் கட்டாயப்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தும், சரியான அளவில் தரமான பொருட்கள் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் கைகளில் தரமற்ற அரிசி கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தங்களது மனுவை வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்கச் சென்றபோது அங்கு அறை பூட்டப்பட்டிருந்ததால் அரை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து தாசில்தார் வசந்த மல்லிகா மேஜையில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து தேமுதிகவினர் போராட்டத்தை கைவிட்டனர். இதில் மாவட்ட அவைதலைவர் கொம்பையா பாண்டியன் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன் பொதுக்குழு உறுப்பினர் ஜி.ஆர்.சாமி நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் நகரநிர்வாகிகள் பாலு பிரசன்னா பாபுமதிமுத்து உட்பட பல தேமுதிகவினர் கலந்து கொண்டனர்