2026 தேர்தல் சூடு: தூத்துக்குடியில் காவல்துறை முழு கட்டுப்பாடு, தீவிர சோதனை!

2026 தேர்தல் சூடு: தூத்துக்குடியில் காவல்துறை முழு கட்டுப்பாடு, தீவிர சோதனை!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் உத்தரவின் பேரில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் தீவிர வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் பணப்பரிமாற்றம், சட்டவிரோத செயல்கள், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் சுதீர் வசவப்பபுரம் சோதனைச் சாவடியில் ஆய்வு செய்தார். சாத்தான்குளம் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் பெரியதாழை பகுதியில் நேரடி கண்காணிப்பு மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் செய்துங்கநல்லூர் சாவடியில் பணிகளை பார்வையிட்டார்.

காவலர்கள் ஒளிரும் ஜாக்கெட்டுகள் அணிதல், சிசிடிவி பராமரிப்பு, வாகன விவரங்கள் பதிவு உள்ளிட்டவை கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் காவல்துறை முழு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.