தூத்துக்குடி மாவட்டத்தில் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 19 பேர் அதிரடி மாற்றம் : நெல்லை சரக டிஐஜி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்: நெல்லை சரக டிஐஜி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 19 பேர் அதிரடி மாற்றம் : நெல்லை சரக டிஐஜி உத்தரவு!

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி  மாவட்டத்தை சேர்ந்த  19 காவல்துறை ஆய்வாளர்கள்  பணியிடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வடக்கு, முத்தையாபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கம் ,  உள்ளிட்ட காவல் நிலைய  ஆய்வாளர்கள் பனியிட மாற்றம்.

அதன்படி  முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த  ஜெயசீலன் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளராகவும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

www.tutyvision.com

 கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து காலியிட இருப்பிலும், காலியிட இருப்பில் இருந்த சாந்தி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளராகவும், 

 விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளராகவும் , விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காலியிட இருப்பில்  இருந்த வீரசோலை விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

மதுரையில் காலியிட இருப்பில்  இருந்த பிரேம் ஆனந்த் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.