அன்னை கதீஜா அரபிக் கல்லூரியின் 7ம் ஆண்டு ஆலிமா கதீஜிய்யா பட்டமளிப்பு விழா!!

தூத்துக்குடியில் உள்ள அன்னை கதீஜா மகளிர் அரபிக் கல்லூரியின் ஏழாம் ஆண்டு ஆலிமா கதீஜிய்யா பட்டமளிப்பு விழா மற்றும் 9ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

அன்னை கதீஜா அரபிக் கல்லூரியின் 7ம் ஆண்டு ஆலிமா கதீஜிய்யா பட்டமளிப்பு விழா!!

தூத்துக்குடியில் உள்ள அன்னை கதீஜா  மகளிர் அரபிக் கல்லூரியின் ஏழாம் ஆண்டு ஆலிமா கதீஜிய்யா பட்டமளிப்பு விழா மற்றும் 9ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் அன்னை கதீஜா மகளிர் அரபிக் கல்லூரியின் ஏழாம் ஆண்டு ஆலிமா கதீஜிய்யா பட்டமளிப்பு விழா மற்றும் 9ஆம் ஆண்டு நிறைவு விழா தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நடைபெற்றது. 

விழாவிற்கு ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா  மரைக்காயர் தலைமை தாங்கினார்.  பொருளாளர் சையது இப்ராஹிம் மூசா, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜூபைர்,  முகமது உவைஸ் அப்துல்லாஹ் ஷேரீப்,  பீர் முகமது அசிம், மற்றும் முத்து வாப்பா, நூர்தீன்,   முகமது ரபீக், ஜெய்லானி, முகமது யூசுப், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.  மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியர் தாஜுதீன்,   ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் கிராஅத் ஓதினார்கள். அனைவரையும் உதவி தலைவர் எம் எஸ் எப் ரகுமான் வரவேற்புரை ஆற்றினார். மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி துணை முதல்வர் அஸ்ராத் அகமது நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழீம் விழா துவக்வுரை ஆற்றினார்.

மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ், அரசு காஜி முஜிபுர் ரகுமான், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜாமியா பள்ளிவாசல் செயலாளர் சாகுல் சிராஜுதீன் ஆண்டறிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். இதில் தமிழ்நாடு ஜமாத் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் கலந்து கொண்டு மூன்று மாணவிகளுக்கு பட்டம் வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஜாமியா பள்ளிவாசல் இமாம் சேக் உதுமான் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து ஈத்கா ஜும்மா பள்ளிவாசல் இமாம் அக்பர் அலி துவா ஓதினார். 

பாரம்பரியமிக்க தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகம் சபை சார்பில் நடத்தப்படும் அரபிக் கல்லூரி கடந்த 9 வருடங்களாக சிறந்த முதல்வரை கொண்டு மற்றும் சிறந்த பேராசிரியர் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது மாணவிகள் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்வதற்காக வாரந்தோறும் சிறப்பான சொற்பொழிவு கடந்த வருடம் முதல் பட்ட வகுப்பு மாணவிகளுக்கு தையல் மற்றும் கைத்தொழில் வகுப்புகள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா தெரிவித்தார்.