தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..
மன்னார் வளைகுடா பகுதியில் நாளை(ஜன.10) முதல் பலத்த பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளது.