காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!!
காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!!
தூத்துக்குடியில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி தாளமுத்துநகர், ராம்தாஸ் நகரைச் சேர்ந்தவர் சகாய தாமஸ் சக்கரவர்த்தி மகன் அலங்கார பாபு (22).மீனவர். இவர் கடந்த ஓராண்டிற்கு முன் ஓவியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு தம்பதியர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஓவியா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்த அலங்கார பாபு நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.