தாளமுத்துநகர் அருகே மது வாங்கி கொடுப்பதில் தகராறு: 2வாலிபர்களுக்கு கத்திக்குத்து!
தூத்துக்குடி தாளமுத்துநகரில் மது வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரில் மது வாங்கி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் பூமாரியப்பன் (வயது 29). தொழிலாளி. இவருக்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் கார்த்திக் (24) என்பவருக்கும் இடையே மது வாங்கிக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தனது நண்பர் மேட்டுப்பட்டியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முனீஸ்வரன் (22) என்பவருடன் சேர்ந்து பூமாரியப்பன் மற்றும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் இசக்கிகுமார் (29) ஆகியோரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இது குறித்து பூமாரியப்பன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து கார்த்திக், முனீஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.