தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!

பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!

பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2023 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

 தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா 05.08.2023 விடுமுறை நாளான சனிக்கிழமையில் வருவதால் அன்றைய தினம் வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்காக / கல்வி நிறுவனங்களுக்காக இந்த உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனவே, 05.08.2023 அன்று வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு / கல்வி நிறுவனங்களுக்கு இந்த விடுமுறைக்கு பதிலாக 12.08.2023 இரண்டாவது சனிக்கிழமை மாற்றுபணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.