நடுக்கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி..!
தூத்துக்குடியில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி இனிகோ நகரைச் சேர்ந்த சேசுராஜ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் கடந்த 25ம் தேதி இரவு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இரவு 8 மணியளவில் பலத்த காற்று வீசியதால் படகில் இருந்த தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த செல்வா மகன் கிளைட்டன் (40) என்ற மீனவர் கடலுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது..
இதையடுத்து அவரை சக மீனவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை யாம். இந்நிலையில் இன்று காலை முயல்தீவு அருகே அவரது உடல் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து மீனவர்கள் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மரைன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் வழக்குப் பதிந்து, கிளைட்டன் உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சைரஸ் விசாரணை நடத்தி வருகிறார்.