ரயில் நிலையமாக மாறிய தூத்துக்குடி தனியார் பள்ளி : மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரயில்வே தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மாதிரி ரயில் நிலையம்' அமைக்கப்பட்டது...

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரயில்வே தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மாதிரி ரயில் நிலையம்' அமைக்கப்பட்டது.
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக மாணவரகளுக்கு ரயில் முன்பதிவு மாதிரி தத்ரூபமாக செய்து கண்பிக்கப்பட்டது. ரயில் நிலையம் முன்பதிவு சீட்டு பயண எண் புறப்படும் நேரம், சேரும் நேரம் போன்ற அமைப்புகள் விளக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய தாஸ், தாளாளர் அகஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் விக்டர், மற்றும் லசால் குருஸ்புரம் தஸ்நேவிஸ் பள்ளி தலைமை ஆசிரியாகள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் லூர்து சாமி செய்திருந்தார்.