ஆறுமுகனேரி பகுதியில் பைக்கில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா்!

ஆறுமுகனேரி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா்.

ஆறுமுகனேரி பகுதியில் பைக்கில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா்!

ஆறுமுகனேரி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் தினசரி சேகரமாகும் குப்பைகள் அப்பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வந்தது. இதனால் குப்பை மலை போல் குவிந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தியது. அந்த இடத்தை சுத்தப்படுத்தும்பணி ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே பேரூராட்டி நிா்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிய குப்பைக் கிடங்கு அமைக்க ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதற்கான இடத்தை தோ்வு செய்ய ஆறுமுகனேரிக்கு வந்த அவா், கொட்டைமடைக்காடு பகுதியை பாா்வையிட சென்றபோது, சாலை பழுதடைந்து இருந்ததால் காா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விஏஓ சரவணனின் பைக்கில் அவரை பின்னால் அமர வைத்து சுமாா் 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அப்பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டாா்.