தலைமை ஆசிரியருக்கு பணியிட ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்!

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தலைமை ஆசிரியருக்கு பணியிட ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்!

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், சிதம்பராபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி வணக்கம் மேரி. இவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட ஒப்புதல் அளித்தும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அந்த ஒப்புதலை அளிக்க மறுத்ததை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜான்சன் தலைமையில், மாவட்டத் தலைவர் ஜெயசீலன், பொருளாளர் ஹெர்பன்சிங் ஆகியோர் முன்னிலையில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி  அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

அதனைத்தொடர்ந்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து (பொறுப்பு) உள்ளிருப்பு பேராட்டம் நடத்திய ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில், பணியிட ஒப்புதல் அளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதில், மாநில செயலாளர் ராஜேந்திரன், தீர்ப்பாயக்குழு உறுப்பினர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் ராபர்ட் சிங், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானதுரை, மாவட்ட துணைச் செயலாளர் மருதப்பபாண்டியன், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ராஜகுமார், செயலாளர் கார்த்திக்ராஜா, தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.