தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பணியிடம் மாற்றம் : புதிய எஸ்பி- ஆக சிலம்பரசன் நியமனம்..!

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ்க்கு ஏற்கனவே பணியிட மாற்றம் வந்து பணியிட மாறுதலுக்காக காத்திருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே உள்ள பணியிட மாறுதலில் அவர் தூத்துக்குடியில் இருந்து பணி மாறுதல் ஆகி செல்ல உள்ளார். இந்த நிலையில் புதிய மாவட்ட எஸ்பியாக நெல்லை மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வந்த சிலம்பரசன் தூத்துக்குடி புதிய எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.