சாலையில் திரிந்த 18 மாடுகள் பறிமுதல் : தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை!
தூத்துக்குடியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் திரிந்த 18 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெருக்களில் தற்போது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது இடங்களில் சுற்றி திரிய விட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் அறிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி பாளை., ரோட்டில் நேற்று இரவு போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 18 மாடுகளை மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி தலையிலான மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து தூத்துக்குடி மாநகர கோசாலையில் ஒப்படைத்தனர்.