காதலனை அடித்து விரட்டிவிட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

காதலனை அடித்து விரட்டிவிட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடி கடற்கரையில் காதலனை அடித்து விரட்டிவிட்டு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும், அவரது காதலனும் நேற்று இரவு தூத்துக்குடியில் உள்ள மத்திய பாதுகாப்பு அலுவலர் குடியிருப்பு அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் காதலனை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

பின்னர் வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் செய்துள்ளார். அவரை மீட்ட போலீசார் அவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கடற்கரை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து இந்த சம்பவத்தில் வாலிபர்கள் 2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.