விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் அதிகாலையில் கைது..! முதல்வர் விஜய் குறித்து பேசிய பேச்சு சர்ச்சை

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் அதிகாலையில் கைது..! முதல்வர் விஜய் குறித்து பேசிய பேச்சு சர்ச்சை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாலை நேரத்தில் விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், ஜி.வி. மார்க்கண்டேயனை கைது செய்து, தொடர்ந்து விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 வழக்கின் விவரங்கள் மற்றும் சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் தரப்பில் இதுகுறித்து எதிர்வினைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.