தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3பேருக்கு இலவச முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3பேருக்கு முழங்கால் மூட்டுகளையும் மாற்றி வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆர்த்தோ பிரிவில் மூன்று நாட்களில் நேரடியாக மூன்று பேருக்கு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் சுமார் ரூ.2 முதல் 3 லட்சம் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர். துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர். எல். பாவலன் மற்றும் அவரது குழுவினரின் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
சிகிச்சை பெற்றவர்கள், மருத்துவமனை முதல்வர், துணை முதல்வர் உறைவிட மருத்துவர், மயக்க மருந்துத் துறைத் தலைவர் மற்றும் அவரது குழு மற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.