மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் முள்ளக்காடு ராஜீவ் நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் மகன் வெற்றி செல்வன் (30), லாரி டிரைவர் ஆன இவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 தினங்களுக்குமுன்பு மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதனால் மனவேதனையில் இருந்த வெற்றிச்செல்வன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்கு பதிவு செய்து இவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.