தமிழ்நாட்டில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜித்தின் 'துணிவு' திரைப்படம்!!
தமிழ்நாட்டில் அஜித்தின் 'துணிவு' திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அஜித்தின் 'துணிவு' திரைப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' சாமானியர்கள் மீது வங்கிகள் நிகழ்த்தும் அத்துமீறல்களை பேசுகிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். ஜனவரி 11-ம் தேதி வெளியான இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் முதல்நாள் நள்ளிரவு 1 மணி அளவில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டன.
படம் வெளியான முதல் நாள் தமிழகம் முழுவதும் ரூ.24.59 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் படம் ரூ.200 கோடியைக்கடந்து வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.