தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து : மாவட்ட தேர்தல் அதிகாரி இளம்பகவத் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து : மாவட்ட தேர்தல் அதிகாரி இளம்பகவத் அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து நாளை திங்கட்கிழமை நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என மாவட்ட தேர்தல் அதிகாரி இளம் பகவத் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் 13,76624  வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6, 71742, பெண்கள் 704689, இதர, 193 வாக்காளர்கள் உள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களின் நலன் கருதி 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்கு சாவடிகளை பிரித்து துணை வாக்குப் சாவடிகள் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் தெரிவித்தார். 

 

அதேபோல் தேர்தல் நடத்தி விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில், மக்கள் தொடர்பு முகாம் உள்ளிட்டவை தேர்தல் முடியும் வரை நடைபெறாது என தெரிவித்தார்.