தமிழக முதல்வரால் நம்பர் ஒன் மாநிலமாக வளர்ச்சி அடைந்து தலை நிமிர்ந்து நிற்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..!

தமிழக முதல்வரால் நம்பர் ஒன் மாநிலமாக வளர்ச்சி அடைந்து தலை நிமிர்ந்து நிற்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேச்சு..!

தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் திறமையான நிர்வாகத்தால் நம்பர் ஒன் மாநிலமாக வளர்ச்சி அடைந்து தலை நிமிர்ந்து நிற்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்

      தூத்துக்குடி திமுக தலைவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் 73-வது பிறந்தநாளையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15வது வார்டு மடத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் பொன் பெருமாள், தொழிலாளர் நல அணி அமைப்பாளர் முருகஇசக்கி, அவைத்தலைவர் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனர். கவுன்சிலா் இசக்கி ராஜா வரவேற்புரையாற்றினாா். 

     வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 1400 பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசுகையில் திமுக தலைவர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு 15 வது வார்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம். கடந்த ஐந்தாண்டு காலமாக திமுக நல்லாட்சி புரிந்து வருகிறது. நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது கொரோனா பேரிடர் தலைவிரித்தாடியது. அதற்கு முன்னர் அதிமுக ஆட்சியில் வீட்டிலேயே இரு வெளியே வராதே கடையை திறக்காத, ஸ்கூலுக்கு போகாத, தொழில் செய்யாத, தனித்திரு முடங்கி இரு என்று சொன்னார்கள். குடும்பத் தலைவிகளுக்கு தான் அதிக வேலை நமக்கு வருமானமே இல்லாமல் முடங்கி இருந்த இக்கட்டான நிலை. அதைவிட ஒன்றிய பாஜக அரசு வாசலில் விளக்கை ஏற்று கைத்தட்டு என்று சொல்லி மூடநம்பிக்கை செயலை செய்ய சொன்னாங்க அதையும் சிலர் செய்தார்கள்.

ஆனால் நமது முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தினார். அதன் பலனாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. எல்லோரும் மாஸ்க் போட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து தங்கள் வேலைகளை வியாபாரங்களை ஆரம்பிங்கன்னு சொல்லி, இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்யத் தயங்கிய நிலையில் தானே கொரோனா வார்டுகளுக்கு சென்று பார்வையிட்டு கண்காணித்தார். அந்த அளவுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடிய வியாதியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்தார் உடனடியாக கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 வழங்கினார்.

அதுபோல 24 மணி நேரமும் குடும்பத்துக்காக உழைத்து வரும் மகளிருக்கு உதவித் தொகையாக அல்லாமல் மகளிர் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு இந்த மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் வழங்கி வருகிறார். தேர்தல் முடிந்தவுடன் ரூபாய் 2000 வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இப்பொழுது நாம் யாரும் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லாமல் மார்க்கெட் போக மருந்து வாங்க, இப்படி சுதந்திரமாக நமது கையிருப்பை நம்பி இருக்கிறோம். இந்த உரிமைத் தொகை ஏப்ரல் 14ம் தேதி காலை 7 மணிக்கு ரூபாய் ஐயாயிரம் எல்லோருடைய வங்கி கணக்கிலும் முதலமைச்சர் உத்தரவின்படி திடிரென வரவு வைக்கப்பட்டு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கைம்பெண்களுக்கு, முதியோர்கள் என 38 லட்சம் பேருக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கியுள்ளார். அதே மாதிரி பெண்களுக்கான தொழில் முனைவர் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவி, மகளிர் குழுக்களுடைய கடன் தள்ளுபடி, விவசாய பயிர் கடன், கூட்டுறவு வங்கியில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் கிட்டத்தட்ட 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். இன்னைக்கு தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வளர்ச்சி 11.19சதவீதம் வளர்ச்சி. தொழில் வளர்ச்சி 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு நம் கண்கூடாக பார்க்கிறோம். வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலை, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை நைட்ரஜன் திட்டம், டைடல் நியோ பார்க் இதெல்லாம் நம்ம பகுதியில் அமைந்துள்ள திட்டங்கள். அருகில் உள்ள இடத்தில் 2008ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகள் கனிமொழி எம்பி தொடர் முயற்சியால் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் நிலையில் இருக்கு. அதுபோல தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்க பணிகளை தொடர்ந்து மார்ச் 29 ந்தேதி முதல் இரவு நேர விமான சேவைகள் தொடங்கவுள்ளது. இப்படி மாநிலம் முழுவதும் பரவலான எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் முதலமைச்சரின் திறமையான நிர்வாகத்தில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து தலை நிமிர்ந்து நிற்கிறது.

இதனால் ஒன்றிய பாஜக அரசு நீங்கள் வளர்ந்த மாநிலம் உங்களுக்கு ஏன் நிதி தர வேண்டும் என்று கல்விக்கான நிதி மறுப்பு 100 நாள் வேலை திட்ட நிதி மறுப்பு என பாராமுகம் காட்டினாலும் பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து கல்வியிலும் முதலிடம் என சாதனை படைத்துள்ளோம். எம்மதமும் சம்மதம் அனைவரும் சமம் நாமெல்லாம் தமிழர்கள் என்று சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தி மீண்டும் திமுகவை ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் பேசினார். 

      விழாவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபராஜா, செல்வலட்சுமி, வட்ட பிரதிநிதிகள் சோமசுந்தரம், பேச்சிராமன், ஞானசேகர், இளங்கோ, பாலசுரேஷ், பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி சபா நிர்வாகிகள் முத்துவேல் ராஜ் ஞானபிரகாசம், அண்ணா நகர் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சரத் ராஜசேகர், பரத், பகுதி பிரதிநிதி செல்வம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் மணி, கலந்து கொண்டனர்.