திருச்செந்தூரில் ‘அரும்பு’ படிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிலையம் திறப்பு

திருச்செந்தூரில் ‘அரும்பு’ படிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிலையம் திறப்பு

திருச்செந்தூரில் “அரும்பு” படிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிலையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் நெல்லை கவி நேசன் திறந்து வைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பாரதி புத்தகாலயம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ராஜா தலைமை தாங்கினார். முதல் விற்பனையை கல்லா மொழி பங்கு தந்தை அருட்திரு பென்சிகர் துவக்கி வைத்தார். முதல் புத்தகத்தை வழக்கறிஞர் ஜேசுராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கணைணபிரான், ஆசிரியர் பாரதிராஜா, ரமேஷ் அய்யர் உணவக உரிமையாளர் நாகராஜன், சிபிஐ(எம்) ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை சந்திரசேகர் மற்றும் கணேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் ஆர். ராஜ் நன்றி கூறினார்.