பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல் : வாலிபர் கைது!!
தட்டார்மடம் அருகே பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தட்டார்மடம் அருகே பெட்ரோல் பங்க்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள இடைச்சிவிளை மோடிநகரை சேர்ந்த சின்னத்துரை மனைவி கவிதா (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கவிதா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், எம்.ஆகிழவிளையை சேர்ந்த ராஜன் மகன் செல்வ பிரின்ஸ் (30) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 21-ந்தேதி கவிதா, பெட்ரோல் பங்க்கில் இருந்தபோது அங்கு வந்த செல்வ பிரின்ஸ் வந்து கவிதாவை அவதூறாக பேசி சரமாரியாக அடித்து உதைத்தாராம். இதில் காயம் அடைந்த கவிதா, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகம்மது ரபீக் வழக்கு பதிவு செய்து செல்வ பிரின்ஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.