சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் : எஸ்பி வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் எதிரியை கைது செய்து 468 மதுபாட்டில்களை கைப்பற்றியும், முத்தையாபுரம் காவல் நிலைய கொள்ளை வழக்கில் CCTV காட்சிகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து 3 பவுன் தங்கச் செயினை மீட்டும் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை கைது செய்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார், உதவி ஆய்வாளர் சுந்தரம், தலைமை காவலர் சந்தனகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கைது செய்து 9 பவுன் தங்க நகையை கைப்பற்றிய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ், சிப்காட் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் மற்றும் காவலர் சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10,000/-அபராதம் பெற்றுத்தர சிறப்பாக பணிபுரிந்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி, தலைமை காவலர்கள் சங்கீதா, சமுத்திரகனி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
பாராளுமன்ற தேர்தலின்போது பொட்டலூரணி கிராமத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையை திறம்பட கையாண்ட புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானராஜன் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மிகச்சிறப்பாக District Communication plan தயார் செய்த தூத்துக்குடி டெக்னிக்கல் பிரிவு உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், உதவி ஆய்வாளர் சுபா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் எதிரியை கைது செய்து 468 மதுபாட்டில்களை கைப்பற்றியும், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து 3 பவுன் தங்கச் செயினை மீட்டும் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை கைது செய்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய மற்றும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய 2 திருட்டு வழக்குகளில் எதிரியை விரைந்து கண்டுபிடித்து சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசாரான தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர் சாமுவேல், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார், காவலர் முத்துப்பாண்டி மற்றும் வடபாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் ,
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 45 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க சிறப்பாக பணிபுரிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் சந்திரிகா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு நீதிமன்றத்தில் 7 வருட தண்டனையும், ரூபாய் 10,000/- அபராதமும் தண்டனையாக பெற்றுத்தற சிறப்பாக பணிபுரிந்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை காவலர் கவிதா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாக காணாமல் போன வழக்குகளில் நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து கண்டுபிடித்து சிறப்பாக பணிபுரிந்த திருச்செந்தூர் முதல் நிலை காவலர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
முத்தையாபுரம் காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகளை கைது செய்ய உதவியாக இருந்தும் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய சட்ட விரோத லாட்டரி விற்பனை செய்த வழக்குகளில் ஒரு எதிரியை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மரிய ஜெகதீஸ் மற்றும் பிரகாஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து ரூபாய் 4,50,000/- மதிப்புள்ள 10 பவுன் தங்க தாலி செயினை மீட்க சிறப்பாக பணிபுரிந்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய காவலர் தினகரன் கனகராஜ் என்பவரின் மெச்சத்தை தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 20,000/- அபராதமும் பெற்றுத் தர சிறப்பாக பணிபுரிந்த திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் சந்திரகலா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 25 காவல்துறையினரின் சிறந்த பணியை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.