தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் அமைச்சர் பி. மதன் ராஜா பிறந்தநாள் விழா!

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் அமைச்சர் பி. மதன் ராஜா பிறந்தநாள் விழா!

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புறநகர் மாவட்ட செயலாளரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சருமான ஓட்டப்பிடாரம் தொகுதி MLA பி. மதன் ராஜா பிறந்தநாள் விழா கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தூத்துக்குடி புறநகர் வடக்கு பகுதி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் மற்றும் வட்டச் செயலாளர்கள் சார்பில், தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர்–அருள்மிகு பாகம்பிரியாள் அம்மாள் திருக்கோவிலில் அமைச்சர் பி. மதன் ராஜா பெயரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அன்னதான நிகழ்ச்சியை தூத்துக்குடி புறநகர் மாவட்ட வடக்கு பகுதி இணைச் செயலாளர் S. வேல்முருகன் தொடங்கி வைத்தார். பகுதி செயற்குழு உறுப்பினர்கள் S. அன்னபூரணி, E. அருணாதேவி, V. அன்னலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அமைச்சர் பி. மதன் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி புறநகர் மாவட்ட வடக்கு பகுதி செயலாளர் M. கணேஷ் செய்து, தலைமை தாங்கினார். தூத்துக்குடி புறநகர் மாவட்ட மாணவரணி இணை அமைப்பாளர் V. சதீஷ் மற்றும் பகுதி துணைச் செயலாளர் AT. சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், 1-வது வார்டு M. ராஜேஷ்குமார், 2-வது வார்டு M. அரவிந்த் பாலா, 14-வது வார்டு V. வாசன் மற்றும் 14-வது வார்டு துணைச் செயலாளர் A. லதா உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அமைச்சர் பி. மதன் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.