தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட 18 வது மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட 18 வது மாநாடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள உதவி திட்ட அலுவலக வளாகம் மாடியில் வைத்து நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் சுரேஷ் பாண்டி செயல் அறிக்கை முன்மொழிவை வாசித்தார். மாவட்ட பொருளாளர் கார்த்திகா வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் புதிய நிர்வாகிகளை அறிவித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் பாண்டியம்மாள் உரையாற்றினார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி ராதா நிறைவுறையாற்றினார். 

புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக சாந்தகுமாரி, செயலாளராக சுடலைமணி, பொருளாளராக உமா மகேஸ்வரி துணைத் தலைவர்களாக சுரேஷ்பாண்டி, பிரேமா, முரளிதரன், நாயகம்,  இணைச் செயலாளராக மோகன், கார்த்திகா, தனலட்சுமி, ஐயப்பாண்டி, பெலிக்ஸ் உட்பட முப்பது பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி ராதா கூறுகையில் 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டம் மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க‌ ஆர்வலர்கள், பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக முடித்துள்ளனர். இந்த மாநாட்டில்  தென் தமிழகத்தில் அறிவியல் மையம் என்பது பெரிதாக எதுவும் இல்லை தூத்துக்குடியை மையப்படுத்தி திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை இணைத்து மிகப்பெரிய அறிவியல் மையம் கோவில்பட்டியில் உருவாக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் விளையாடி மகிழக்கூடிய பல்வேறு பூங்காக்கள் உள்ளன, அதேபோல் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வகையில் அறிவியல் பரிணாம அறிவியல் பூர்வமான பூங்காக்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 வருகின்ற ஜனவரி 30 31, பிப்ரவரி 1ஆம் தேதிகளில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்க உள்ளார். இதில் ஐஎஸ்ஆர்ஓவின் விஞ்ஞானி சசிகுமார், ஐஐடி விஞ்ஞானி பேராசிரியர் ராமானுஜம், சென்னை மத்திய அரசாங்கத்தினுடைய முதல்நிலை விஞ்ஞானி டிவி வெங்கடேஸ்வரன், மிகப்பெரிய எழுத்தாளர் ஆயிசன் உள்ளிட்ட பலர் முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 500 பேர் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். என கூறினார்.