தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 93,430 நோயாளிகள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர்: ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 93,430 நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையும், 1347210 நபர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் 93,430 நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையும், 13,47,210 நபர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின்கீழ் கள அளவில் 304 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், 15 இயன்முறை மருத்துவர்கள், 15 நோய் ஆதரவுச் செவிலியர்கள், 180 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் சேவைகளை வழங்குகின்றனர். மேலும், அனைத்து அரசு மருத்துவ மையங்களில் பணிபுரியும் 78 மக்களைத் தேடி மருத்துவச் செவிலியர்கள் தொற்றா நோய்க்கான மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, கள அளவில் கண்டறியப்பட்டு பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கும் தொற்றா நோய்களுக்கான தொடர் மருத்துவ சேவைகளை வழங்குகின்றனர்.
அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இது நாள் வரை ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் 6259 நபர்களுக்கும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 5024 நபர்களுக்கும், கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் 4574 நபர்களுக்கும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 6484 நபர்களுக்கும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 7062 நபர்களுக்கும், புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5763 நபர்களுக்கும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 4837 நபர்களுக்கும், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 6908 நபர்களுக்கும், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 5249 நபர்களுக்கும், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4076 நபர்களுக்கும், உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 4414 நபர்களுக்கும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 6832 நபர்களுக்கும்,
திருச்செந்தூர் நகராட்சியில் 2489 நபர்களுக்கும், கோவில்பட்டி நகராட்சியில் 5902 நபர்களுக்கும், காயல்பட்டிணம் நகராட்சியில் 2792 நபர்களுக்கும் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் 14765 நபர்களுக்கும் என 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் பொதுமக்கள் 93,430 நோயாளிகள் மருத்துவ பயன் பெற்றுள்ளனர். மேலும் 1347210 நபர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.