தூத்துக்குடியில் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்ற பணியிடமாற்ற ஆணையினை இரத்து செய்ய கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்ற பணியிடமாற்ற ஆணையினை இரத்து செய்ய கோரி கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்ற பணியிடமாற்ற ஆணையினை இரத்து செய்ய வேண்டும், 3 ஆண்டு பணி முடித்த அலுவலர்களுக்கு எந்தவித அரசியல் நிர்பந்தமும் இன்றி அவரவர் விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.மாரிராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.செல்வக்குமார், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தே.முருகன், மேனாள் துணை பொது செயலாளர் வெங்கடேசன், சங்க நிர்வாகிகள் சங்கர், தவமணி பீட்டர், மனோகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் அ.சாம் டேனியல் ராஜ் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்திற்கு மாவட்டம் முழுமையும் உள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பெருவாரியாக கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் த.பிரபாவதி நன்றி கூறினார்.