மாநகராட்சி வரி வசூல் மையங்கள் விடுமுறை தினங்களில் செயல்படும்: ஆணையர் அறிவிப்பு!
தூத்துக்குடியில் விடுமுறை தினங்களில் மாநகராட்சி வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் விடுமுறை தினங்களில் மாநகராட்சி வரி வசூல் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள சொத்துவரி தொடர்பான அரசாணையில் 30.4.2023க்குள் செலுத்தப்படும் சொத்து வரிகளுக்கு 5% ஊக்குத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்கள் வருகின்ற விடுமுறை தினங்களான ஏப்.23, 29, மற்றும் 30 ஆகிய சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்கும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.