புளியம்பட்டி திருவிழாவில் மனிதாபிமானம்: தனித்து நின்ற குழந்தையை மீட்ட காவல்துறை

புளியம்பட்டி திருவிழாவில் மனிதாபிமானம்: தனித்து நின்ற குழந்தையை மீட்ட காவல்துறை

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அந்தோணியார் திருத்தலத்தில் நடைபெற்று வரும் திருவிழாவின் போது, கூட்ட நெரிசலில் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக நின்ற குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (10.02.2026) திருவிழா கூட்ட நெரிசலில் ஒரு குழந்தை தனியாக நின்று கொண்டிருந்ததை கவனித்த கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தகுமாரி மற்றும் அவரது குழுவினர் உடனடியாக குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறை ஒலிபெருக்கி மூலம் குழந்தை தொடர்பான தகவல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெற்றோர் அங்கு வரவழைக்கப்பட்டு குழந்தை பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த மனிதாபிமான செயல்பாட்டை பாராட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை. சிலம்பரசன் அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.