தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 9 மணி நேரத்தில் 1000.31 மி. மீ மழை பொழிவு: ரெட் அலர்ட்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் பகல் 3 மணி வரை 9 மணி நேரத்தில் மொத்தம் 1001.30 மிமீ மழை மழை பெய்துள்ளது : மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்று கிழமை காலை முதல் மேலும் அதிகரித்து, பலத்த மழையாக பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியில் இருந்து பகல் 3 மணி வரையிலான கடந்த 9 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி: 30.50 மி.மீ, ஸ்ரீவைகுண்டம்: 200.00 மி.மீ, திருச்செந்தூர்: 121.00 மி.மீ, காயல்பட்டணம்: 72.00 மிமீ குலசேகரபட்டணம்: 86 மிமீ, சாத்தான்குளம்: 258 மி.மீ, கோவில்பட்டி: 15 மி.மீ, கயத்தார்: 12 மி.மீ, கழுகுமலை: 22 மி.மீ, கடம்பூர்: 19 மி.மீ, எட்டயபுரம்: 12.80 மி.மீ, விளாத்திகுளம்: 36 மி.மீ, காடல்குடி: 20 மி.மீ, வைப்பார்: 36 மி.மீ, சூரங்குடி: 20 மி.மீ, ஓட்டப்பிடாரம்: 9 மி.மீ, வேடநத்தம்: 17 மி.மீ என மொத்தம்: 1001.30 மிமீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் சராசரியாக 52.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.