தூத்துக்குடி மாவட்டத்தில் சிபி எம் கட்சியினர் மறியல் போராட்டம்: 212 பெண்கள் உட்பட 608 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் சிபி எம் கட்சியினர் மறியல் போராட்டம்: 212 பெண்கள் உட்பட 608 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் சிபி எம் கட்சியினர் மறியல் போராட்டம்: 212 பெண்கள் உட்பட 608 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு இடங்களில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 212 பெண்கள் உட்பட 608 பேர் கைது செய்யப்பட்டனர்.
விண்ணையும் மட்டும் விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் பல லட்சம் கோடி ஊழல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ராஜா, சண்முக ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.சங்கரன், பா.ராஜா, எம்.எஸ்.முத்து, ராகவன், காசி, கணபதி சுரேஷ் , வின்சென்ட், சித்ரா தேவி, உள்ளிட்ட 54 பெண்கள் உட்பட 154 பேர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அர்ச்சுனன், தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேச்சிமுத்து, அப்பாதுரை, மாவட்டகுழு உறுப்பினர் முத்து குமார், ஜேசு மணி, உள்ளிட்ட 38 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.பி.எம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன் ரவீந்திரன் மாவட்ட குழு உறுப்பினர்கள் தேவேந்திரன் விஜயலட்சுமி சாலமன் ஜோதிபாசு ஜோதி மணி கிருஷ்ணவேணி ஜீவராஜ் உட்பட உள்ளிட்ட 106 பெண்கள் உட்பட 254 பேர் கலந்து கொண்டனர்.
ஶ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் பூமியில் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ் மாவட்ட குழு உறுப்பினர்கள் நம்பிராஜன் ரவிச்சந்திரன் மணி சோ மாரியப்பன் உள்ளிட்ட 30 பெண்கள் உட்பட 100 பேர் கலந்து கொண்டனர்.