தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நாணயத் திருவிழா : கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நாணயத் திருவிழா : கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்!

சாத்தான்குளம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் நாணயத் திருவிழா மற்றும் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி - பாரத ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நடத்திய நாணயத் திருவிழா மற்றும் கிழிந்த, அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் சாத்தான்குளம் மெர்க்கன்டைல் வங்கி கிளையில் நடைபெற்றது. 

கிளை மேலாளர் ராஜேஷ் முன்னிலையில் நடந்த முகாமில் தூத்துக்குடி மண்டலம் புதுக்கோட்டை கரன்சி செஸ்ட் முதன்மை மேலளர் இளங்கோவன், துணை மேலாளர் கணேசன், வங்கி பணியாளர்கள் மகாராஜன், விக்னேஸ்வரன், பிரபாகரன்,சுந்தர், லிங்கராஜா,துரைபாண்டியன், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

முகாமில் பொதுமக்கள் கொண்டு வந்த கிழிந்த ரூபாய் நோடட்டுகளைப் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை உடனுக்குடன் வழங்கினர். இம்முகாமில் சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வங்கி வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை சாத்தான்குளம் மெர்க்கண்டைல் வங்கி கிளை மேலாளர் ராஜேஷ் மற்றும் துணை மேலாளர் ஜெபக்குமார் வங்கிப் பணியாளர்கள் செய்திருந்தனர்.