முடிதிருத்தும் தொழிலாளருக்கு இலவச வீடு மனை வழங்க கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்!

வீடில்லாத முடிதிருத்தும் தொழிலாளர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிதிருத்தும் தொழிலாளருக்கு இலவச வீடு மனை வழங்க கோரி சங்க கூட்டத்தில் தீர்மானம்!

வீடில்லாத முடிதிருத்தும் தொழிலாளர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் (இணைப்பு) சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத் தலைவர் டென்சிங் தலைமையில் சிஐடியூ மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சுதந்திர போராட்ட வீரர் சிஐடியூ மேற்பார்வை தலைவர் பாசுதேவ் ஆச்சாரிய்யா, சுதந்திரப் போராட்ட வீரர் தகைசால் தமிழர் சங்கரய்யா ஆகியோர் மறைவுக்கும், பாலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியான பாலஸ்தீனர் மறைவுக்கும்அஞ்சலி செலுத்தப்பட்டது. 

சிஐடியூ மாவட்ட செயலாளர் ரசல் துவக்கி உரையாற்றினார். தொழிற்சங்க சட்ட திருத்தம் பற்றியும் இன்றைய அரசின் சூழ்நிலையைப் பற்றியும் விளக்கி கூறினார். கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நிர்வாகிகள் கருப்பசாமி கருணாமூர்த்தி கௌரவ தலைவர் சதாசிவம் ஏரல் கார்திகேயன், திருமணிகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். 

முடிதிருத்தும் தொழிலாளருக்கு வீடில்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தில் வீடுகள் கொடுக்க கோரியும், முடிதிருத்தம் நிலையங்களுக்கு மானிய விலை மின்சாரம் வழங்க வேண்டும், முடிதிருத்தும் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் நலவாரியத்தில் இருந்து வழங்க வேண்டும், திருமண நிதி ரூ.20000மும் பென்சன் ரூ.3000மும் உயர்த்தி வழங்க வேண்டும், மானிய கடன் வழங்க வேண்டும், முடித்திருத்துவோர் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகரத்திலுள்ள w சலூன் மற்றும் பியூட்டி பார்லரில் விளம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடியில், சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் நினைவிடம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.