ஜேசிபி வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதல்: பயணிகள் உட்பட 15 பேர் காயம்!

கோவில்பட்டி அருகே ஜேசிபி வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி விலக்கு பகுதியில் முன்னால் சென்ற ஜேசிபி வாகனம் மீது திருப்பதியில் இருந்து நாகார்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜேசிபி டிரைவர், உதவியாளர் மற்றும் பஸ்சில் பயணித்த பயணிகள் என 15 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அவர்கள் அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.