ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடரும் ஜாதிய படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!!
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழ புதுக்குடி பட்டியலின கூழி தொழிலாளி காளிமுத்து படுகொலை கண்டித்தும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடரும் ஜாதிய படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், மாநில செயலாளர் கலையரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், ஆதித்தமிழர் தெற்கு மாவட்ட செயலாளர் ஊர்காவலன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்ட நிர்வாகி தர்மர் நன்றி கூறினார்.