துத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு..!

துத்துக்குடி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு..!

துத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 29, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, கயத்தார், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், ஏரல், திருவைகுண்டம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடுகளை தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் 37 மற்றும் 42 ஆகிய வார்டுளுக்கு தாமோதரநகர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியிலும், காயல்பட்டினம் நகராட்சியில் 8, 9 மற்றும் 10 ஆகிய வார்டுகளுக்கு காயல்பட்டினம் துளிர் பள்ளியில் (குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி) வைத்தும், வி.புதூர் பேரூராட்சியில், பரலாட்சி சாலை டி.ஆர். சுப்புராஜ் திருமண மண்டபத்தில் வைத்தும், ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் யாதவர் திருமண மண்டபத்தில் வைத்தும், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் காயாமொழி ராமசந்திரா ஆதித்தனார் நினைவு மண்டபத்தில் வைத்தும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் எப்போதும்வென்றான் சோலைசாமி கோவில் மண்டபத்தில் வைத்தும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற உள்ளது.

30 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் 35, 36 மற்றும் 44 ஆகிய வார்டுளுக்கு சுப்பையாபுரத்தில் உள்ள சார்லஸ் நடுநிலைப்பள்ளியில் வைத்தும், கோவில்பட்டி நகராட்சியில் 26 மற்றும் 32 ஆகிய வார்டுளுக்கு வக்கீல் தெருவில் உள்ள நந்தினி மண்டபத்தில் வைத்தும், ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் திருமண மண்டபத்தில் வைத்தும், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்தும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் சேதுக்குவாய்த்தான் சமுதாயநலக்கூடத்தில் வைத்தும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தான்குளம் பூச்சிக்காட்டில் உள்ள ஜெயந்திநாதர் மேரிடைம் பயிற்சி கல்லூரியில் வைத்தும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற உள்ளது.

31 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 02 மற்றும் 14 ஆகிய வார்டுளுக்கு அய்யாசாமி காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைத்தும், திருச்செந்தூர் நகராட்சியில் 18, 19 மற்றும் 21 ஆகிய வார்டுளுக்கு TNTA பள்ளியில் வைத்தும், ஏரல் பேரூராட்சி பகுதியில் ஜே.ஜே திருமண மண்டபத்தில் வைத்தும், கழுகுமலை பேரூராட்சி பகுதியில் ஆறுமுகநகர் கிரிபிரகார மேலரத வீதியில் உள்ள சமுதாயநலக் கூடத்தில் வைத்தும், கயத்தார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள அகிலாண்டபுரம் பஞ்சாயத்து வளாகத்தில் உள்ள சமுதாயகூடத்தில் வைத்தும், புதூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் முத்துலாபுரம் உயர்நிலைப்பள்ளியில் வைத்தும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் 3, 11 மற்றும் 12 ஆகிய வார்டுளுக்கு கந்தசாமிபுரத்தில் உள்ள R.C. பெத்தானி துவக்கப்பள்ளியில் வைத்தும், காயல்பட்டினம் நகராட்சியில் 1, 2 மற்றும் 7 வது வார்டுளுக்கு தைக்கா தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைத்தும், எட்டயபுரம் பேரூராட்சியில் தெப்பக்குள தெருவில் உள்ள எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வைத்தும், கடம்பூர் பேரூராட்சியில் கடம்பூர் தங்கதுரைச்சி சாமிக்காளை நாடார் திருமண மண்டபத்தில் வைத்தும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் புளியங்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைத்தும், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வைத்தும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று, உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடு வழங்கி, 15 அரசு துறைகள் வாயிலாக வழங்கப்படும் 46 சேவைகள் குறித்தும், பொதுமக்களிடையே விளக்கி கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 2,04,789 விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.