கனிமொழி கருணாநிதி எம்.பி முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாகச் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாகச் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியளிக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார்.
MERF காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் ரஞ்சித் மற்றும் MERF ஒலியியல் பேராசிரியர் மேத்யூ நிஷாந்த் ஆகியோர் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியை விளக்கினார். முகாமில் மாணவ, மாணவிகளுக்கு செவித்திறன் குறைபாடு எதனால் வருகிறது, அதைக் கண்டறியும் வழிமுறைகள். செவித்திறன் குறைபாடு இருந்தால் மேல் பரிசோதனைக்கு பரிந்துரை செய்வது ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கனிமொழி எம்.பி முன்னெடுப்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாகச் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியை மருத்துவ வல்லுநர்களால் அளிக்கப்பட்டது.
நிகழ்வில், 10 பேருக்கு காதொலி கருவிகள், 12 பயனாளிகளுக்குச் சுயஉதவி கடன், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 3 பேருக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்றிதழ்யை கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியது: இந்த நிகழ்ச்சிகாண பயிற்சி சிந்தனை வந்தபோது MERF கிட்டக் கோரிக்கை வைத்தோம். தூத்துக்குடியில் ஒரு முகாம் நடத்த வேண்டும் என்றோம், அவர்கள் முகாம் நடத்தி 150 பிள்ளைகளுக்குப் பெரியவர்களுக்கு காதொலி கருவிகள் வழங்கினார்கள். மேலும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் அவர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்று MERF மருத்துவமனையில் சிகிச்சைகள் தரப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு செவித்திறன் பிரச்சனை இருந்தால், அதை முன்பே பரிசோதனையில் கண்டறிந்தால் நிச்சயமாக அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று மருத்துவர்கள் கூறினார். இந்த இரண்டும் தான் இந்த பயிற்சியை நடத்தக் காரணம்.
நம்முடைய மாவட்ட ஆட்சியர், இந்த முகமை நடத்த எல்லா முயற்சிகளையும் செய்து, அனைவரையும் தொடர்பு கொண்டு இந்த அளவுக்கு ஒரு முயற்சி எடுத்து இந்த முகமையை தொடங்கி இருக்கிறார். இங்கே இருக்கக் கூடிய அதிகாரிகள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். இதனுடைய வெற்றி என்பது மக்களுடைய கைகளில் மட்டும் தான் இருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய விஷயம் உங்கள் கைகளில் இருக்கிறது.
நிறையக் குழந்தைகளுக்குக் காது கேட்காது என்று புரிவதற்குப் பல வருடங்கள் ஆகிறது. ஒரு குழந்தையின் வாழ்க்கையை நாம் மாற்றப் போகிறேன் என்ற உறுதியோடு நீங்கள் பணியாற்றியது தான், இது வெற்றி பெறப்போகிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற்றோம் என்றால் நிச்சயமாக இதைத் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த முடியும். அதை அடுத்து நாடு முழுவதுமாக இதைக் கொண்டு சேர்க்க முடியும். உங்கள் கைகளில் தான் இந்த நாட்டில் இருக்கக்கூடிய அடுத்த தலைமுறையின் இளைஞர்களும் இளம்பெண்களுக்கும் இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை பெறுவதற்கான முயற்சி என்பதை நீங்கள் அத்தனை பேரும் புரிந்துகொள்ள வேண்டும்.
1975-ல் இந்தியாவிலேயே முதல் முறையாக காதொலி கருவியை வழங்கத் தொடங்கினார் கலைஞர். கலைஞர் அவர்கள் கிட்டத்தட்டத் தன்னுடைய மகனைப் போல மிகவும் மதிக்கக் கூடியவர் தான் மருத்துவர் மோகன் காமேஸ்வரன். ஒருநாள் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தபோது, என்னுடைய தந்தையார் அவர்கள் அனைவரும் என்னிடம் ஏதாவது உதவி கேட்கிறார்கள், நீங்கள் எதுவுமே கேட்பதில்லையே என்றார். அதற்கு மருத்துவர் மோகன் காமேஸ்வரன், தனக்கு எதுவும் வேண்டாம் ஆனால் இந்த தமிழ்நாட்டிற்கு நிறைய குழந்தைகளுக்குக் காது கேட்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அதிக செலவு ஆகும். அது அரசாங்கத்தால் தான் மட்டும்தான் செய்ய முடியும். இதை நீங்கள் செய்து தந்தால் போதும் என்று சொன்னபோது. உடனே அதைப் கலைஞர் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு அதற்கு அரசு ஆணை போட்டு, இன்றைக்கு அறுவை சிகிச்சை (implant surgery) தமிழ்நாட்டில் நடக்கிறது என்றால் அதற்கும் காரணம் கலைஞர் மற்றும் மோகன் காமேஸ்வரன் அவர்களும் தான் என்று பேசினார்.
நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாவட்ட பயற்சிக் குழு தலைவர் மருத்துவர் பாரதிதாசன், தூத்துக்குடி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ச.பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார், தூத்துக்குடி நலப் பணிகள் இணை இயக்குநர் V.விஜயா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-----------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE