மத்திய நிதியமைச்சரை கண்டித்து விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!

மத்திய நிதியமைச்சரை கண்டித்து விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சரை கண்டித்து விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், விஸ்வகர்மா என்பது ஒரு ஜாதியும் இல்லை பாரம்பரிய தொழிலும் அல்ல என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை கண்டித்தும் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்மா சமுதாய மகாஜன பேரவை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஸ்வகர்மா நகைத் தொழிலாளர்கள் சங்கம் முன்னாள் தலைவர் பெருமாள், மற்றும் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு, முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு விஸ்வகர்மா பேரியக்கம் பொதுச் செயலாளர் மூர்த்தி, மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி முத்துசாமி ஆச்சாரி இளைஞர் பேரவை தலைவர் ராஜா, நிறுவனர் கிடாரி, முத்துசாமி ஆச்சாரி இளைஞர் பேரவை மாரீஸ்வரன், மற்றும் கூட்டமைப்பை சார்ந்த மாரியப்பன், செல்வசங்கர், கோவில்பட்டி சிவபெருமாள், முனியசாமி, இசக்கிமுத்து, முருகன்,சங்கரலிங்கம், செந்தில்வேல் முருகன் உட்பட சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.