ரேஷன் கடையில் ஆதார் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!!

மானிய விலையில் உணவுப் பொருட்கள் தொடர்ந்து பெற விரும்பும் பயனாளிகள் தங்களது ஆதார் எண் உள்ளீடு செய்வதற்கான கால அவகாசம் மத்திய அரசால் நீடிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 -கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற, பயனாளிகள் ( UIDAI . gov.in) என்ற இணையதள முகவரியில் தங்களது ஆதார் எண் பதிவு செய்தல் அல்லது ஆதார் எண் அங்கீகாரம் செய்ய வேண்டும்.
நாளது தேதி வரை ஆதார் எண் பெறப்படாத பயனாளிகள் / ஆதார் எண் உள்ளீடு செய்யாத பயனாளிகள் தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்கள் பெற விரும்பினால் தங்களது ஆதார் எண்களை இணையதளத்தில் 31.03.2025 வரை உள்ளீடு செய்ய கால அவகாசம் மத்திய அரசால் நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே மானிய விலையில் உணவுப் பொருட்கள் தொடர்ந்து பெற விரும்பும் பயனாளிகள் தங்களது ஆதார் எண் உள்ளீடு செய்வதற்கான கால அவகாசத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேட்டுக்கொண்டுள்ளார்.