மணிப்பூர் மாநிலத்தின் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள துளசி மகளிர் சட்டக்கல்லூரி மாணவிகள் மணிப்பூர் மாநில வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள துளசி மகளிர் சட்டக்கல்லூரி மாணவிகள் மணிப்பூர் மாநில வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறும் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலையங்கள், மசூதிகள், கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன, 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளனர் . அதில் குறிப்பாக பெண்களை ஆடைகளை கலைந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது உலக அளவில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது இந்திய நாட்டிற்க்கு மிகப்பெரிய தலைகுனிவு .
எனவே நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் விதி 267ல் விவாதம் நடத்தி காலதாமதம் ஏற்படுத்தாமல் விதி 176ன் கீழ் இரண்டரை மணி நேரத்தில் விவாதம் நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண சட்டம் இயற்றி மத்திய அரசும் , மணிப்பூர் மாநில அரசும் ஆக்கபூர்வ சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் , பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கர்களுக்கு அதிகபட்ச தண்டனை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும், இனியும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெண்களுக்கு எதிராக குற்ற செயலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கிடவேண்டும் என்று துளசி மகளிர் சட்டக்கல்லூரி மாணவிகள் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதில் அருணாதேவி ரமேஷ்பாண்டியன், உள்ளிட்ட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.