குடும்பத் தகராறில் தலைமைக்காவலர் உட்பட 2பேருக்கு அரிவாள் வெட்டு: போலிஸ்காரருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியின் உறவினர்களான தலைமைக் காவலர் உட்பட இருவரை அரிவாளால் வெட்டிய போலீஸ்காரை போலீசார் தேடி வருகின்றனர்.

குடும்பத் தகராறில் தலைமைக்காவலர் உட்பட 2பேருக்கு அரிவாள் வெட்டு: போலிஸ்காரருக்கு போலீஸ் வலைவீச்சு!

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியின் உறவினர்களான தலைமைக் காவலர் உட்பட இருவரை அரிவாளால் வெட்டிய போலீஸ்காரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் முத்துக்குமரன் (30). இவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (26), தம்பதியர் இடையே ஏற்பட்ட தகராறில் காளீஸ்வரி கடந்த 6 மாத காலமாக கணவரை பிரிந்து தனது தகப்பனார் வீட்டில் இருந்து வந்தாராம். இந்நிலையில் இன்று மாலை முத்துக்குமரன் மனைவி வீட்டுக்கு சென்று, தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தாராம். 

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது காளீஸ்வரிக்கு ஆதரவாக பேசி அவரது சித்தப்பாவான தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் கணபதி சுப்ரமணியன் (48), மற்றும் அவரது தம்பி பெரியநாயகம் (45) ஆகிய 2 பேரும் தட்டி கேட்டார்களாம். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமரன் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து 2 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டாராம். 

இதில் படுகாயம் அடைந்த கணபதி சுப்ரமணியன், பெரியநாயகம் ஆகிய இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து வழகு்குப் பதிந்து, போலீஸ்காரர் முத்துக்குமரனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.