துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!!

தமிழகத்தின் துணை முதல்வர், திமுக இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி P.கீதா ஜீவன் அவர்களின் உத்தரவின்படியும், மாநகரச் செயலாளர் திரு S.R ஆனந்த சேகரன் அவர்களின் ஆலோசனை படியும்

 51 வது வார்டு , வீரநாயக்கன் தட்டு மகளிர் அணி திருமதி M.முத்துலெட்சுமி  அவர்களின் தலைமையில் அப்பகுதில் உள்ள வீர நாயக்கன் தட்டு மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகளுக்கும் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது..

 இந்நிகழ்வில் 51 வது வார்டு கழக வட்ட செயலாளர் திரு செல்வராஜ், வட்டப் பிரதிநிதி திரு கணேசன், பகுதி மாணவர் அணி விக்னேஷ், மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்..