அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சித்த மருத்துவ தினம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சித்த மருத்துவ தினம்

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 9ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துராசு தலைமை தாங்கினார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். சித்த மருத்துவ தின வரலாறு என்ற தலைப்பில் டாக்டர் செல்வகுமார், உலக அரங்கில் சித்த மருத்துவம் என்ற தலைப்பில் டாக்டர் ஜன்னத் செரிப், சங்க இலக்கியங்களில் சித்த மருத்துவம் என்ற தலைப்பில் டாக்டர் முருகபொற்செல்வி, சித்த மருத்துவமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தமிழ் செம்மல் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, "பொதிகை மலையின் மூலிகைக வளம் பற்றியும், சித்த மருத்துவத்தின் தொன்மை,கொரோனா, டெங்கு காய்ச்சலை குணப்படுத்திய சித்தமருத்துவம் என்ற தலைப்பில் பெருங்குளம் மணிமொழி செல்வன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். 

சித்த மருத்துவ மூலிகைகள், கடை சரக்குகள், பல்வேறு வகையான மூலிகை தேநீர் வகைகள் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் மாணவ மாணவியருக்கு சித்த மருத்துவம் குறித்து வினாடி வினா நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியை பால கங்காதேவி நன்றி கூறினார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் செய்திருந்தார்.